கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், வெற்றி, குமார், மாரிமுத்து பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அம்பலம் பசுபதி நாடார் மற்றும் மந்தித்தோப்பு நாடார் உறவின் […]
கோவில் காவலாளி அஜித் குமார் கொலையில் அரசுக்கான கோரிக்கைகள் ; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் காவலாளி அஜித்குமாரை படுகொலை செய்த காவல்துறையை கண்டித்து, பாண்டியனார் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகைப்போராட்டத்திற்கு பாண்டியனார் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் முன்னிலை வகித்தார், முற்றுகைப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநில வழக்கறிஞர் பிரிவு பெஞ்சமின் […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கிழவிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ16லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார் . தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் முன்னாள் துணைத்தலைவர்,அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், அதிமுக […]
தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் தாலுகா கூட்டம் கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்டச்செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் செந்தில்ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் பாலசிங்கம் ஆட்டோ சங்கம் தொழிலாளர்கள் நலவாரியம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். கோவில்பட்டி வட்டார ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராஜேஷ்குமார், செயலாளராக சுரேஷ்குமார் […]
தூத்துக்குடி மாவட்டம், வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2014 ஆம் ஆண்டு குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் முத்து கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் சோமு (எ) சோமசுந்தரம் (45) மற்றும் மாநாடு தைக்காவூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் அருண்குமார் (35) ஆகியோரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் […]
தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டது,. இங்கு 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது. ஆனால் இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. குறித்த நேரத்துக்கு விமானங்கள் வராததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1996-ம் ஆண்டு […]
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியை பிடிக்கும்; எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்டமாக வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது பிரசார பயணத்தை தொடங்கும் அவர் 23-ந்தேதி தஞ்சை பட்டுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த பயணத்தின் மூலம் அவர் 33 சட்டசபை தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயணம் தொடர்பான இலச்சினை மற்றும் பாடல் […]
கோவில்பட்டி அருகே கிழவிபட்டி மலை அலங்காரி அம்மன், புதுஅம்மன், துர்க்கை அம்மன், சடையாண்டி சாஸ்தா, மலையடி கருப்பசாமி திகோயில் ஆனி பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது. சிறிய மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கி வைத்தார். போட்டியில் முதலிடம் பிடித்த […]
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர். செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:- கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. மலிவான அரசியல் ஆதாயத்திற்கு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜனதா நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமதனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் […]
2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 17 கிராம ஊராட்சிகளில் ஜுன் – 30ம் தேதி முதல் ஜூலை 4ம்தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. புதூர் […]







