கிழவிபட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கிழவிபட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ16லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார் . தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் முன்னாள் துணைத்தலைவர்,அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், அதிமுக நிர்வாகிகள் சேர்முகம், வெற்றி,மாரிமுத்து பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், வழக்கறிஞர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்








