கோவில் காவலாளி அஜித் குமார் கொலையில் அரசுக்கான கோரிக்கைகள் ; கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு
Oplus_16777216

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் காவலாளி அஜித்குமாரை படுகொலை செய்த காவல்துறையை கண்டித்து, பாண்டியனார் மக்கள் இயக்கம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

முற்றுகைப்போராட்டத்திற்கு பாண்டியனார் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சீனிராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் முன்னிலை வகித்தார்,
முற்றுகைப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாநில வழக்கறிஞர் பிரிவு பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், INTUC ராஜசேகரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், ஆவல்நத்தம் லட்சுமணன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், பாண்டியனார் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் விஜயகணேஷ் நிர்வாகிகள் விக்னேஷ் கார்த்திக், குரு, கணேஷ், காளிமுத்து , ராஜ், ரமேஷ் , உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்

முற்றுகைப் போராட்டம் நிறைவில் கோட்டாட்சியர் மகாலட்சுமியை சந்தித்து தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு கொண்டு செல்ல கீழ் க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
*எந்தவித விட குற்றப் பின்னணியும் இல்லாத அஜித்குமார் மீது எந்தவித எழுத்து பூர்வமான புகார் அளிக்கப்படாமல் விசாரணைக்கு அழைத்து சென்று படுகொலை செய்ததை கண்டிக்கிறோம்.
*எழுத்துப்பூர்வமான புகார் பெறப்படாத நிலையில் தனிப்படை அமைத்து படுகொலைக்கு காரணமான துணைக் காவல் கண்காணிப்பாளர்(டி எஸ் பி) சண்முகசுந்தரம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
*அஜித் குமார் மீது பொய்யான புகார் கூறிய நிகிதா என்பவர் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது, அவரின் பின்னணியை பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்க சதி நடப்பது போல் தெரிகிறது, எனவே தமிழ்நாடு அரசு மேற்படி நிகிதாவை கைது செய்து உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும். நிகிதாவுக்கு உதவிய ஐ. ஏ.எஸ் அதிகாரியை கண்டுபிடிக்க வேண்டும்.
*கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பா, மகன் படுகொலை உட்பட எண்ணற்ற லாக்கப் மரணங்களும், தற்போதைய திமுக ஆட்சியில் 20க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்களும் நடந்துள்ளது, மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை தொடர்ந்து படுகொலை செய்து வருவதை தடுத்திட, ஒட்டுமொத்த காவலர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சி அளிக்க வேண்டும்.
*இனிவரும் காலங்களில் காவல் நிலைய படுகொலைகள், சித்திரவதைகள், என்கவுண்ட்டர்கள் போன்றவை நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு உரிய கண்காணிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.







