மந்தித்தோப்பு பத்திரகாளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் உள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் விழா மற்றும் அன்னதானம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக மத்திய ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், வெற்றி, குமார், மாரிமுத்து பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை அம்பலம் பசுபதி நாடார் மற்றும் மந்தித்தோப்பு நாடார் உறவின் முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.








