நாளை குடமுழுக்கு விழா: திருச்செந்தூரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள்




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (7/7/2025) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காகப் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூருக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனம் நிறுத்துவதற்குத் தேவையான வாகன நிறுத்தங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளை இயக்க ஏதுவாக மூன்று தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்குப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று (6/7/2025) திருச்செந்தூர் தற்காலிக பேருந்து நிலையத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.







