கோவில்பட்டி வட்டார ஆட்டோ தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் தாலுகா கூட்டம் கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்டச்செயலாளர் பாபு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் செந்தில்ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் பாலசிங்கம் ஆட்டோ சங்கம் தொழிலாளர்கள் நலவாரியம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி வட்டார ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராஜேஷ்குமார், செயலாளராக சுரேஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

சிபிஐ நகரத் துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி , நகரக்குழு உறுப்பினர்கள் சங்கர், அய்யாசாமி கண்ணன். சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வள்ளிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்







