கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2014 ஆம் ஆண்டு குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் முத்து கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் சோமு (எ) சோமசுந்தரம் (45) மற்றும் மாநாடு தைக்காவூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் அருண்குமார் (35) ஆகியோரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா) குற்றவாளிகளான சோமு (எ) சோமசுந்தரம் மற்றும் அருண்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 6,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை, அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், தலைமை காவலர் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.







