கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ஓட்டடப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல்,உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க பொருளாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.கல்லூரி செயலாளர் கண்ணன், ரோட்ராக்ட் சேர்மன் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வித் துறை பேராசிரியர் ரமேஷ் பாண்டியன் அனைவரையும் வரவேற்றார். பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஒலிம்பிக் தீபம் […]
கோவில்பட்டி என்றால் ஆக்கி பட்டி என்று கூறும் அளவுக்கு கோவில்பட்டி நகரம் ஆக்கியின் தலைநகரமாக திகழ்கிறது நூறு ஆண்டு காலமாக ஆக்கி என்பது கோவில்பட்டி மக்களின் வாழ்வில் இணைந்து இருக்கிறது. ஆக்கி என்பது வாழ்வாதாரமாக விளங்கியது. கோவில்பட்டியில் இலக்குமி ஆலை தூத்துக்குடியில் துறைமுகம், மதுரா கோட்ஸ், ஸ்பிக், போன்ற நிறுவனங்களில் ஆக்கி விளையாட்டுக்கு முக்கியத்துவம் தந்து வீரர்களுக்கு வேலைவாய்ப்பு தந்ததால் ஆக்கி விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்பு பெற்று வந்தனர் மேலும் கோவில்பட்டி இலக்குமி ஆலை […]
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியலில் ஈடுபட நேற்று மாலையில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதன், கிழக்கு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அப்போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். போனஸ் பெறுவதற்கான ஊதிய வரம்பு, அதிகபட்ச போனஸ் சதவீதம் என அனைத்து வரம்புகளையும் ரத்து செய்ய வேண்டும். […]
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கு இடையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி. மஹாலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை […]
கோவில்பட்டியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார், குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி தரும் நுண் கீரைகள் (மைக்ரோகிரின்) வீட்டில் வளர்க்கும் முறை பற்றி ஆலோசனைகள் கூறி வருகிறார். தனது வீட்டில் நுன்கீரைகள் வளர்க்கும் ஆசிரியர் கோ.சுரேஷ்குமார், இது பற்றி பலவேறு பகுதிக்கும் சென்று விளக்கம் அளிக்கிறார். இவர் எழுதிய கட்டுரை மற்றும் நாளிதழ் செய்திகளை பார்த்து அறிந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பதியின் தற்போதைய பட்டத்து தலைவர் அய்யா […]
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54- திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.‘ வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத் தலைவர் ஐசரி கணேஷ் தலைமையில் விழா நடைபெற்றது. போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய படத்தினை இயக்குகிறார். ஆல்பிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 50 வது பொன்விழா ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சவுபாக்யா மஹாலில் நடந்தது.ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ்பாபு தலைமை தாங்கி ,புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். தலைவர் ராஜ்குமார்,செயலாளர் பழனிகுமார்,பொருளாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது. விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் விநாயகா ரமேஷ்,பரமேஸ்வரன், […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி திருமங்கலம் கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவில், ‘சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் […]
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இன்று காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டது. காலை 8.25 மணியளவில் மதுரையை கடந்த வந்தே பாரத் ரெயில் வடமதுரை அருகே சென்ற போது, ஒரு ரெயில் பெட்டிக்குள் திடீரென புகை கிளம்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு அடுத்தடுத்த பெட்டிக்கு நகர்ந்தனர். இது பற்றி கேட்டரிங் ஊழியர்கள் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, நடுவழியில் […]
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., […]







