கோவில்பட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 50 வது பொன்விழா ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சவுபாக்யா மஹாலில் நடந்தது.ரோட்டரி மாவட்ட ஆளுநர் தினேஷ்பாபு தலைமை தாங்கி ,புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.

தலைவர் ராஜ்குமார்,செயலாளர் பழனிகுமார்,பொருளாளர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி வழங்கப்பட்டது.

விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் விநாயகா ரமேஷ்,பரமேஸ்வரன், ஜெயபிரகாஷ் நாராயணசாமி, மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







