தனுஷ் நடிக்கும் D54 திரைப்படம் : பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D54- திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.‘ வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத் தலைவர் ஐசரி கணேஷ் தலைமையில் விழா நடைபெற்றது.
போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய படத்தினை இயக்குகிறார். ஆல்பிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார்.
மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

D54 திரைப்படத்ததிற்கு . தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.







