கோவில்பட்டி: “மைக்ரோகிரின்” வளர்ப்பு ஆர்வலருக்கு பாலபிரஜாபதி அடிகளார் பாராட்டு
கோவில்பட்டியில் வசிக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார், குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி தரும் நுண் கீரைகள் (மைக்ரோகிரின்) வீட்டில் வளர்க்கும் முறை பற்றி ஆலோசனைகள் கூறி வருகிறார்.

தனது வீட்டில் நுன்கீரைகள் வளர்க்கும் ஆசிரியர் கோ.சுரேஷ்குமார், இது பற்றி பலவேறு பகுதிக்கும் சென்று விளக்கம் அளிக்கிறார். இவர் எழுதிய கட்டுரை மற்றும் நாளிதழ் செய்திகளை பார்த்து அறிந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பதியின் தற்போதைய பட்டத்து தலைவர் அய்யா பால பிரஜாபதி அடிகளார் கோவில்பட்டிக்கு வருகை தந்து ஆசிரியர் கோ.சுரேஷ்குமாரை சந்தித்தார்.
மேலும் மைக்ரோகிரின் வளர்ப்பு செயல்பாடு முறைகளை ஆய்வு செய்து பாராட்டியதுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

நாமே நமது வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, தினசரி உணவில் இந்த நுண் கீரைகளை பச்சையாக சேர்த்தால் ஆரோக்கியமான உடல் நலம் பெறலாம் என்ற கருத்தை எல்லோரும் அறிய செய்ய தங்களின் ஆர்வமான செயல்பாடு இருக்க வேண்டும் என்று சுரேஷ்குமாரை, பாலபிரஜாபதி அடிகளார் வாழ்த்தினார்,







