அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த மோதலுக்கு இடையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி. மஹாலில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது.

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை; தசரதன் ஆணையை ஏற்று ராமர் வனவாசம் சென்றார். ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சில கூறி வருகின்றனர்.
ஐந்து வயது குழந்தையான நான் தான் 3 வருடங்களுக்கு முன் அன்புமணியை பாமக தலைவராக்கியவன். இவ்வாறு அவர் கூறினார்







