நெல்லை – சென்னை வந்தே பாரத் ரெயிலில் திடீர் புகை;நடுவழியில் நிறுத்தி சரி செய்யப்பட்டது
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் இன்று காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி புறப்பட்டது.

காலை 8.25 மணியளவில் மதுரையை கடந்த வந்தே பாரத் ரெயில் வடமதுரை அருகே சென்ற போது, ஒரு ரெயில் பெட்டிக்குள் திடீரென புகை கிளம்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் முகத்தில் கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு அடுத்தடுத்த பெட்டிக்கு நகர்ந்தனர்.

இது பற்றி கேட்டரிங் ஊழியர்கள் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் புகை வந்ததற்கான காரணத்தை கண்டுபிடித்தனர். ஏசி காற்று வரும் இடத்தில் இருந்து புகை வந்தது தெரியவந்தது. சற்று நேரத்தில், அந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பிறகு வந்தே பாரத் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.







