இன்று (ஜூலை 15) பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது. கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் காமராஜர் பிறந்தநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழாக்கள் எடுக்கபட்டு வருகின்றன. காமராஜ் மெட்ரிக் பள்ளி கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. […]
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி உடற்கல்வியில் துறை சார்பில் காமராஜரின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு 5 கி.மீ தூரம் மாரத்தான் போட்டி நடந்தது. தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு தொடங்கி மாதாங் கோவில் ரோடு,எட்டையாபுரம் ரோடு,புது ரோடு,மெயின் ரோடு வழியாக 5கிலோமீட்டர் தூரம் எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிகவியல் (வணிகபகுப்பாய்வு) துறையின் சார்பாக கழக துவக்க விழா மற்றும் “வணிக சந்தைப்படுத்துதல் உத்திகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி வழிகாட்டுதலின் படி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். வணிகவியல் (வணிகபகுப்பாய்வு) துறை தலைவர் முனைவர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். தலைமை விருந்தினராக .செல்வகுமார், (CEO, AGJ கம்ப்யூட்டர்ஸ்,)கலந்து கொண்டு […]
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி.
பெருந்தலைவர் காமராஜரின் 123வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சாம்பியன் மாரத்தான் 2025 போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. நாளை 15-ந்தேதி காலை 6.30 .மணி.அளவில் கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு துவங்கி, மெயின் ரோடு, மாதங்கோவில் தெரு. எட்டையாபுரம் ரோடு. புது ரோடு. ரெயில்வே பாலம், வேலாயுதபுரம் ரோடு, என கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று எஸ்.எஸ். டி. எம். கலை மற்றும் […]
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகர 12 வது மாநாடு மந்தித்தோப்பு ரோடு பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார்.. நகரச் செயலாளர் மாரியம்மாள் வேலை அறிக்கையை முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கர் மாவட்ட தலைவர் தினேஷ்குமார், இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அந்தோணி செல்வம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் பூமயில் சிறப்புரையாற்றினார். முடிவில் மாதர் சங்க […]
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் கோவில்பட்டியில் நகர பேரவை கூட்டம் பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நகரத் தலைவர் தம்பிதுரை தலைமை தாங்கினார்.. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, கன்வீனர் முத்துச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரவை கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், கட்டுமான சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட நிர்வாகி அந்தோணி செல்வம் ஆகியோர் பேசினர். நகரச் செயலாளர் மாரியப்பன் […]
தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி ஜூலை 19 முதல் 23ஆம் தேதி வரை கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்திலும் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் நடக்கிறது. இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 33 மாவட்டங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் […]
தேசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனை கோவில்பட்டி விந்தியாவுக்கு
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்சிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழக பெண்கள் அணி பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. தமிழக பெண்கள் அணியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அனியில் பயிற்சி பெற்றஇலுப்பையூரணி பி.விந்தியா இடம் பெற்று சிறப்பான விளையாட்டின் மூலம் அணிக்கு பெருமை சேர்த்தார். இதை யொட்டி கபடி வீராங்கனை விந்தியா மற்றும் பயிற்சியாளர் சுரேஷ் காந்திராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா கோவில்பட்டி மார்க்கெட் ரோட்டில் தேவர் […]
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- பழம்பெரும் திரைப்பட நடிகை, “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த […]
தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. கன்னடத்து பைங்கிளி , அபிநய சரஸ்வதி அழைக்கப்பட்ட அழைக்கப்படும் சரோஜா தேவி பெங்களுருவில் பிறந்தவர். சிறு வயது முதல் சரோஜா தேவி நடனம் பயின்று வந்துள்ளார். அப்போதிலிருந்தே அவருக்கு கலைத்துறை மீது விருப்பம் இருந்தது 1955 ஆம் ஆண்டு வெளியான மஹாகவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் […]







