ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகர புதிய நிர்வாகிகள் தேர்வு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகர 12 வது மாநாடு மந்தித்தோப்பு ரோடு பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார்.. நகரச் செயலாளர் மாரியம்மாள் வேலை அறிக்கையை முன் வைத்தார். மாநாட்டை வாழ்த்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கர் மாவட்ட தலைவர் தினேஷ்குமார், இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி அந்தோணி செல்வம் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் பூமயில் சிறப்புரையாற்றினார். முடிவில் மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் சசிகலா நிறைவுரையாற்றினார்.

மாநாட்டில் 100 நாள் வேலையை நகர்ப்புற பெண்களுக்கும் வழங்க வேண்டும், கோவில்பட்டி நகரத்தில் சீராக குடிநீர் வழங்க வேண்டும், ரேஷன் பொருட்கள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வேண்டும், நகர்புறத்தில் வீடற்ற பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகர தலைவராக குருவம்மாள், செயலாளராக ஜானகி, பொருளாளராக மாரியம்மாள் உட்பட 13 பேர் கொண்ட புதிய நகர குழு தேர்வு செய்யப்பட்டது.







