காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி.
பெருந்தலைவர் காமராஜரின் 123வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சாம்பியன் மாரத்தான் 2025 போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.
நாளை 15-ந்தேதி காலை 6.30 .மணி.அளவில் கோவில்பட்டி காமராஜர் சிலை முன்பு துவங்கி, மெயின் ரோடு, மாதங்கோவில் தெரு. எட்டையாபுரம் ரோடு. புது ரோடு. ரெயில்வே பாலம், வேலாயுதபுரம் ரோடு, என கோவில்பட்டி நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று எஸ்.எஸ். டி. எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறைவடையுள்ளது.
சாம்பியன் மாரத்தான் போட்டியை கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஆர். எஸ். ரமேஷ், எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாரத்தான் போட்டியில் முதலிடம் பெரும் வீரருக்கு ரூபாய் 5000, இரண்டாம் இடம் பெறும் வீரருக்கு 3000 ரூபாய், மூன்றாம் இடம் பெறும் வீரருக்கு 2000 ரூபாய், நான்காம் இடம் முதல் பத்தாவது இடம் வரை பெறும் வீரருக்கு தலா 500 ரூபாய் வீதம் ரோக்கபரிசுகள் வழங்கப்பட உள்ளது,.
சாம்பியன் மாரத்தான் போட்டியில் கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான வீரர்கள் வீராங்கனைகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென எஸ்.எஸ்.டி.எம். கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.







