“வணிக சந்தைப்படுத்துதல் உத்திகள்” கருத்தரங்கு
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வணிகவியல் (வணிகபகுப்பாய்வு) துறையின் சார்பாக கழக துவக்க விழா மற்றும் “வணிக சந்தைப்படுத்துதல் உத்திகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி வழிகாட்டுதலின் படி சுயநிதிப் பாடப் பிரிவுகளின் இயக்குநர் முனைவர் மகேஷ் குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
வணிகவியல் (வணிகபகுப்பாய்வு) துறை தலைவர் முனைவர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார்.

தலைமை விருந்தினராக .செல்வகுமார், (CEO, AGJ கம்ப்யூட்டர்ஸ்,)கலந்து கொண்டு வணிக சந்தைப்படுத்துதல் உத்திகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் 90க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
தொடக்கத்தில் முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி கோபிகா வரவேற்று பேசினார். முடிவில் இரண்டாமாண்டு வணிகவியல் துறை மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிகவியல் (வணிகபகுப்பாய்வு) துறைத்தலைவர் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







