கோவில்பட்டி நகர கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் கோவில்பட்டியில் நகர பேரவை கூட்டம் பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, நகரத் தலைவர் தம்பிதுரை தலைமை தாங்கினார்.. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்து உரையாற்றினார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, கன்வீனர் முத்துச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பேரவை கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து சிபிஎம் நகரச் செயலாளர் சீனிவாசன், கட்டுமான சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட நிர்வாகி அந்தோணி செல்வம் ஆகியோர் பேசினர்.
நகரச் செயலாளர் மாரியப்பன் வேலை அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார். இறுதியில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் பேசினார்,

பேரவை கூட்டத்தில் 9 பேர் கொண்ட புதிய நகர குழு தேர்வு செய்யப்பட்டது நகரத் தலைவராக தம்பிதுரை, செயலாளராக மாரியப்பன், பொருளாளராக செல்வம், துணை தலைவராக பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளராக செண்பகராஜ் ,கமிட்டி உறுப்பினர்களாக அந்தோணிச் செல்வம்,கருப்பசாமி,வீரக்குமார், எபிணேசர், சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.







