ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி போட்டி: தூத்துக்குடி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு
தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி ஜூலை 19 முதல் 23ஆம் தேதி வரை கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்திலும் கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்திலும் நடக்கிறது.

இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 33 மாவட்டங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணி தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாலை கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தேர்வில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் இவர்களில் அருண், தனுஷ் பாண்டியன், நவீன் குமார், விஷால், அழகு மோகனப்ரியன், கௌதம் , சுந்தர் அஜித், குபேரன், கார்த்திகேயன், மணிமாறன் , பூல்பாண்டி , கண்ணன், ஈனோக், ஈஸ்வர் , அபிஷேக், ஆனந்த், சீனிவாசன், பரத், மாரி கிருஷ்ணா, விஜய் முருகன் ஆகிய 21 பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டனர்,
நியமிக்கப்பட்ட தேர்வு குழு உறுப்பினர்களான காளிமுத்து பாண்டியராஜா சுரேஷ்குமார் மாயாண்டி ஆகியோர் மாவட்ட அணியை தேர்வு செய்தனர்
வீரர் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி , சுரேந்திரன், வேல்முருகன், மணிவண்ணன், சுரேஷ்குமார், ஆகியோர் செய்திருந்தனர்







