தேசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனை கோவில்பட்டி விந்தியாவுக்கு பாராட்டு
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்சிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழக பெண்கள் அணி பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்றது.
தமிழக பெண்கள் அணியில் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அனியில் பயிற்சி பெற்றஇலுப்பையூரணி பி.விந்தியா இடம் பெற்று சிறப்பான விளையாட்டின் மூலம் அணிக்கு பெருமை சேர்த்தார்.

இதை யொட்டி கபடி வீராங்கனை விந்தியா மற்றும் பயிற்சியாளர் சுரேஷ் காந்திராஜ் ஆகியோருக்கு பாராட்டு விழா கோவில்பட்டி மார்க்கெட் ரோட்டில் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், அரசு மருத்துவர் அருள்குமார் கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலர் குருராஜ், அனைத்து வணிகர்களின் சங்க பேரமைப்பு தென்மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் பேரரசு கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன், தமிழ்நாடு அகம் அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட பொறுப்பாளர் வடிவேல் முருகன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெய கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமார், தேவர் மகாஜன சங்க செயலாளர் சங்கர் குரு உள்ளிட்டோர் பாராட்டி பேசினார்கள்.’

விழா ஏற்பாடுகளை சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் முருகன், மகேஷ், யுவராஜ், லாரன்ஸ், ஆகியோர் செய்து இருந்தனர்.







