கோவில்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் , காமராஜர் உருவம் பொறித்த மாஸ்க் அணிந்து ஊர்வலம் புறப்பட்ட காட்சி,
இன்று (ஜூலை 15) பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
கோவில்பட்டியில் பள்ளி, கல்லூரிகளில் காமராஜர் பிறந்தநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழாக்கள் எடுக்கபட்டு வருகின்றன.
காமராஜ் மெட்ரிக் பள்ளி


கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்தலைவர் ஆர்.எஸ்..ரமேஷ் மற்றும் உபதலைவர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். சங்க செயலாளர் ஜெயபாலன், சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,சங்க உறுப்பினர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன், தொழிலதிபர்கள் இந்திரராஜா, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி செயலாளர் செல்வம்,பொருளாளர் பாஸ்கரன்,பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கண்ணன், செல்வம், பொன்ராமலிங்கம், ரவிமாணிக்கம், பள்ளி முதல்வர் பிரபு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ, மாணவியர் காமராஜர் முகமூடி அணிந்து ஆசிரியர்களோடு ஊர்வலமாக சென்று மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து,காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்

தூத்துக்குடி மாவட்டம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கோவில்பட்டி ரோட்ரிக்ஸ் தெருவில் கொண்டாடப்பட்டது.
சிவந்தி.ஆதித்தனார் நற்பணி மன்றம் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும் திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளருமான கவுன்சிலர் தவமணி தலைமையில் காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டத..

நிகழ்ச்சியில் திமுக சிறுபான்மையினர் அணி அமலி பிரகாஷ், கோவில்பட்டி வேலாயுதபுரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், நிர்வாகி நல்லய்யா, அன்பரசு, ஐ.என்.டி.யு.சி. ராஜசேகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், ஜெய்கிருஸ் அறக்கட்டளை வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்







