கோவில்பட்டியில் காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ரமேஷ், அன்னை சிவகாமி படிப்பகம் சார்பில் மருத்துவர் சிதம்பரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பாஜக சார்பில் நகரத் தலைவர் காளிதாசன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், காங்கிரஸ் நகர தலைவர் அருண்பாண்டியன், மதிமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனிராஜ், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, தமிழக வெற்றிக் கழகம் மாவட்ட பொறுப்பாளர் பாலா, நாடார் பொதுநல மருத்துவமனை திலகரத்தினம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் காமராஜர் வேடமடைந்து ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.







