சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம், பூத் ஏஜெண்டுகள் நியமனம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் பற்றி […]
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று மதியம் கைதான ஸ்ரீகாந்த் இரவு எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி தயாளனிடம், “போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று கூறி நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார். இருப்பினும் இங்கு ஜாமீன் கோர முடியாது. என்டிபிஎஸ் சிறப்பு கோர்ட்டில்தான் ஜாமீன் பெற முடியும் என கூறி ஸ்ரீகாந்துக்கு […]
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் , போலீசில் புகார்
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவராக இருக்கும் க.தமிழரசன் கோவில்பட்டியில் பொது மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், பொதுநலப் பிரச்சனைகள், அரசு திட்டங்கள் முறையாக லஞ்சலாவன்யங்கள் இல்லாமல் மக்களுக்கு சென்று சேரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி போராட்டங்கள் நடத்துவது, மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் இந்திய கலாச்சார […]
திமுக துணை பொதுசெயலாளராக நியமிக்கபட்ட கனிமொழி எம்.பி,க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அலுவலக அறை ஓதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கனிமொழி நேற்று பயன்படுத்த தொடங்கினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழியை அவரது இருக்கையில் அமர செய்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளரும் […]
பா..ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் நீடித்து வருகிறது. அடுத்ததாக கூட்டுகின்ற பொதுக்குழுவின்போது தான் வெற்றி பெறுவதுடன் தனது பக்கம் தனிப் பெரும்பான்மை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் ராமதாஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவு அதிகமாக உள்ள மண்டலங்களை குறி வைத்து அங்குள்ள […]
சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம். திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் உள்ள வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது. முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதருவது சிறப்பு . […]
மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. நெல், கரும்பு உள்ளிட்ட ஒரு சில […]
கோவில்பட்டியில் தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தேவர் சமூக நலச்சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேகபாண்டியன் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு அகம்(அலுவலர்) நலச்சங்க மாநில தலைவர் சுடலைமுத்து, தனசேகரன்,மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு கூட்டம் கோவில்பட்டி ஏ கே எஸ் தியேட்டர் ரோடு ஜீவா இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்களுக்கு கட்சி அடையாள அட்டை வழங்கப்பட்டது. பாலன் இல்லம் புனரமைப்பு நிதி திரட்டுவது மற்றும் மாநில மாநாட்டிற்கு செல்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகரச்செயலாளர் செந்தில் […]
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சைக்கிள், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், சேலை மற்றும் அரிசி பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து மாவட்ட அளவிலான கபடி […]







