அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம், பூத் ஏஜெண்டுகள் நியமனம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது,
மாலை 3.30 மணிக்கு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக நாளை காலை 9.30 மணிக்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு நடக்கிறத.,
பின்னர் மாலை 3.30 மணிக்கு, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.







