போதைபொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர் ஸ்ரீகாந்த், சிறையில் அடைப்பு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்று மதியம் கைதான ஸ்ரீகாந்த் இரவு எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி தயாளனிடம், “போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்று கூறி நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார்.

இருப்பினும் இங்கு ஜாமீன் கோர முடியாது. என்டிபிஎஸ் சிறப்பு கோர்ட்டில்தான் ஜாமீன் பெற முடியும் என கூறி ஸ்ரீகாந்துக்கு நீதிபதி நீதிமன்ற காவல் விதித்தார். நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.







