விஜய் பிறந்தநாள்: கோவில்பட்டியில் நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி பழனியாண்டவர் கோவில் தெருவிலுள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, சைக்கிள், ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், சேலை மற்றும் அரிசி பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்ந்து மாவட்ட அளவிலான கபடி போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், வெற்றி கோப்பையும் வழங்கினர். நகரப் பொறுப்பாளர்கள் ஆரோக்கியராஜ், செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் செல்வின் சுந்தர், மதன்ராஜா, வக்கீல்கள் ராஜேந்திர சிங், ராமமூர்த்தி, கார்த்திக் மாறன், மகளிர் அணி அன்னலட்சுமி, செல்வி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா செய்திருந்தார்.








