கோவில்பட்டி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு கூட்டம் கோவில்பட்டி ஏ கே எஸ் தியேட்டர் ரோடு ஜீவா இல்லத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது புதிய உறுப்பினர்களுக்கு கட்சி அடையாள அட்டை வழங்கப்பட்டது. பாலன் இல்லம் புனரமைப்பு நிதி திரட்டுவது மற்றும் மாநில மாநாட்டிற்கு செல்வது ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு நகரச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், உதவி செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி,நகரப்பொருளாளர் சீனீவாசன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்.








