அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
கோவில்பட்டியில் தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
தேவர் சமூக நலச்சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேகபாண்டியன் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு அகம்(அலுவலர்) நலச்சங்க மாநில தலைவர் சுடலைமுத்து, தனசேகரன்,மகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

விழாவில், மருத்துவர் பாலகிருஷ்ணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,தொழிலதிபர்கள் காளிமுத்து,ஜெயசங்கர், மனோஜ், விளாத்திகுளம் வட்டார தேவர் மகாஜன சங்க தலைவர் சக்திவேல், வீரவாஞ்சி நகர் தேவர் சமுதாயம் தலைவர் மாயகண்ணன், அய்யனேரி ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன்,கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம் துணைத் தலைவர்கள் பூல்பாண்டியன், ராமச்சந்திரன், துணைச் செயலாளர்கள் மாரிமுத்து. செண்பகராஜ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.








