சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு அலுவலக அறை ஒதுக்கீடு
திமுக துணை பொதுசெயலாளராக நியமிக்கபட்ட கனிமொழி எம்.பி,க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அலுவலக அறை ஓதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை கனிமொழி நேற்று பயன்படுத்த தொடங்கினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழியை அவரது இருக்கையில் அமர செய்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் புச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.







