தமிழ் நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் இராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து , “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதைப் போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தியது. இம் மாநில அளவிலான போட்டிக்கு தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதியதில் 69 சிறுகதைகள் தேர்வாகி அதனை சிறந்த புத்தகமாகப் பதித்து 2025 ஜூன் 7ம் தேதி திருச்சி கலையரங்கில் வெளியிடப்பட்டது. இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் […]
தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த தினம் தான் “வைகாசி விசாகம்” திருநாள். விசாகம் என்பது ஆறு நட்சத்திரங்களை உள்ளடக்கியது. தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 9) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும்.. இக்கோயிலில், இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு […]
கோவில்பட்டி தெட்சிணா விநாயகர் கோவிலில் 61வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடந்தது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மகாவிஷ்ணு ஹோமம், சுதர்சன ஹோமம், அனுக்கிரக ஹோமம் நடந்தது. பின்னர் காலை 6.30 மணிக்கு தீர்த்த குடங்கள் எடுத்து கோயிலை வலம் வந்து, கோபுர விமான கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தெட்சிணா மூர்த்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. […]
சேரன் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் பாரதி கண்ணம்மா என்ற திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய பாண்டவர் பூமி, வெற்றி கோடி கட்டு திரைப்படங்களானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. இப்படங்களின் வெற்றி மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து, நடிகராகவும் இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கிய சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார். பின்னர் இவர் இயக்கத்தில் இவரே நடித்து வெளியான […]
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பாராட்டு விழா நடத்துவதற்கான அனுமதியை நிராகரித்து அரசுக்கு, துணை போலீஸ் கமிஷனர் எழுதிய கடிதம் தற்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆர்.சி.பி. அணிக்கு பாராட்டு விழா கேட்டு, கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியது. ஆனால் பாதுகாப்பு கருதி விதானசவுதாவில் ஆர்.சி.பி. அணிக்கு […]
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் தலைவாசல் பகுதியில் ஒரு வீட்டில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட மணிவண்ணன் மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். […]
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. நடித்து . இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா […]
கோவில்பட்டியில் மாநில சீனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நடைபெற்றது. கடந்த நான்காம் தேதி தொடங்கி 3 மைதானங்களில் நடந்த இந்த போட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன. நேற்று காலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் சென்னை மாவட்ட அணி அபாரமாக ஆடி 9-2 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் விருதுநகர் மாவட்ட அணி 2-1 என்ற கோல் கணக்கில் […]
கோவில்பட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மே-21 முதல் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. நாளை 9-ந் தேதி நிறைவடையும் கண்காட்சியில் பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தினசரி ஒரு மாணவரை தேர்வு செய்து ரூ1000 மதிப்புள்ள மாணவர் விரும்பிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி வினோதினி குலுக்கல் முறையில் தேர்வு […]
கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புதூர் வானரமுட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆறுமுகப்பாண்டி மகன் ஆட்டோ டிரைவர் சண்முகராஜ் (வயது 35). இவர் கடந்த 9.4.2023 இரவு ஜமீன் தேவர்குளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வெள்ளத்துரைச்சி (28) என்பரை சவாரி ஏற்றிக் கொண்டு நாலாட்டின்புதூர் நாச்சியார்பட்டி to காளாம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவை வழிமறித்து சண்முகராஜை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் வெள்ளைத்துரைச்சி கொலை செய்யப்பட்டார். இதை […]







