தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் இவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துக்குமாரி (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்று விட்டார். 4 மாதங்களுக்கு […]
கோவில்பட்டி, முத்து நகரைச் சேர்ந்தவர் அருள் அய்யா மகன் ஐசக் தேவராஜ் (வயது 56), இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே கே.கைலாசபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கோவில்பட்டியில் இருந்து தினமும் ஐசக் தேவராஜ் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில், […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன இளையநகரம் பகுதியில் வசித்து வரும் பாப்பம்மாள் (75), அவரது மகன்கள் சீனிவாசன் (45), ஜெயவேல் (43). இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சின்ன இளைய நகரம் கானாற்று கரையோரம் உள்ள தங்களின் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கானாற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதை கண்டும் காணாமலும் இருந்த இவர்கள் தற்போது கானாற்றில் தூர் வாரும் பணிகள் […]
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரானதை முன்னிட்டு கோவில்பட்டி அருகே வானரமுட்டி இந்து துவக்கப்பள்ளியில் மக்கள் நீதி மய்யம், புத்துயிர் இரத்ததானகழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முகாமிற்கு தலைமை தாங்கினார்.திமுக கோவில்பட்டி மேற்கு ஒன்றியச்செயலாளர் ராதாகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். கண்விழி பரிசோதகர்கள் கணேஷ்வரி, ஜோதி, […]
தேசியமுற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக கோவில்பட்டியில் மாவட்டச்செயலாளர் சுரேஷ் தலைமையில், மாநில கேப்டன் மன்ற துணைசெயலாளர், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வைரம் , கோவில்பட்டி தொகுதி செயலாளர் காளிதாஸ் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைத்த பூத்கமிட்டியை ஆய்வு செய்து தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. கழக பொதுச்செயலாளர் பிரேமலதா கை காட்டும் வேட்பாளரை வெற்றிபெற செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது, மேலும் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் […]
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 13 ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. தூத்துக்குடி அரசு மாவட்ட இசைப் பள்ளி, நெய்தல் கலைக்குழு, நெய்தல் கலைக்குழு, கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, உவரி களியல் கலைக்குழு, போக் மார்லி அந்தோணி தாசனின் இசைக்குழு ஆகிய மண் சார்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைக் கனிமொழி […]
கோவில்பட்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் சாலைப்பணியாளர்களுக்கு 2 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி ஜூன் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, இணை செயலாளர் துரைசிங்கு, துணைத் தலைவர் செல்லச்சாமி, செயலாளர் கிளட்வின், மாநில செயலாளர் ஹரி […]
விபத்தில் இறந்த அனல்மின் நிலைய பொறியாளர் குடும்பத்துக்கு ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
தூத்துக்குடியில் விபத்தில் இறந்த அனல்மின் நிலைய பொறியாளர் குடும்பத்திற்கு ரூ.1கோடியே 30 லட்சம் நஷ்டஈடு வழங்க திருநெல்வெலி மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலூகா சேர்ந்தமங்களம் மறவர் தெருவை சார்ந்த அய்யாகண்ணு மகன் கணேஷ் (46), என்பவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 22.11.2019 அன்று தெர்மல் கேம்ப் -1 அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் அடைந்தவர் தூத்துக்குடி […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் இன்று கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், பனையேறும் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது இந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பனைமரத்தில் ஏறி கள் இறக்கினார். சுமார் 22 அடி உயர பனையில் ஏறிய சீமான், பனைமரத்தில் சரசரவென ஏறி உச்சிக்கு சென்றார். […]
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணியின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார். இந்த நிலையில், திருவள்ளூர் மணவாள நகரில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா, மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய பாமக […]







