தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா நிறைவு


தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி முன்னெடுப்பில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 13 ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

தூத்துக்குடி அரசு மாவட்ட இசைப் பள்ளி, நெய்தல் கலைக்குழு, நெய்தல் கலைக்குழு, கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, உவரி களியல் கலைக்குழு, போக் மார்லி அந்தோணி தாசனின் இசைக்குழு ஆகிய மண் சார்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைக் கனிமொழி எம்.பி கண்டு மகிழ்ந்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவு அரங்குகளுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று, அரங்குகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, பல வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ன. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார்







