அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா, ( தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ) […]
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனுசின் சகோதரரான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, சின்ன குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி (வயது 45). இவரது மகள் பவித்ரா (28). இவரது கணவர் பிரபாகரன். இவர்களுக்கு லித்திக்ஸா (7), தீப்திஸா (5) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பவித்ரா, கணவர் பிரபாகரன் மற்றும் குழந்தைகளுடன் பள்ளபட்டி சவுந்தராபுரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டார். இது குறித்து அரவக்குறிச்சி […]
வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர். வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டும். அரிசி, கோதுமைக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை கோவில்பட்டி மார்க்சிஸ்ட் […]
உலக பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.. ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வழி நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இணை ஆணையராக செல்லத்துரை பொறுப்பேற்ற நிலையில் உள்ளூர் பக்தர்கள் வழக்கமாக செல்லும் தரிசன வழித்தடத்திற்கு தடை விதித்தார். மேலும் மற்ற பக்தர்களை போல் கட்டண வழித்தடம் அல்லது பொது தரிசனம் வழியாக தரிசனம் […]
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைப்’ படம் கடந்த 5-ந் தேதி கர்நாடகம் தவிர உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. அதற்கு முன்பு கடந்த மாதம்(மே) 24-ந்தேதி சென்னையில் நடைபெற்ற அந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, தமிழில் இருந்துதான் உங்கள் மொழி பிறந்தது, அதனால் நாம் வேறுபட்டவர்கள் இல்லை என்று கூறினார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட சினிமா வர்த்தக சபை, கன்னடம் […]
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவுநாள்; கோவில்பட்டியில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் வாஞ்சிநாதன். தற்போதைய தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர். வாஞ்சி என்று பிரபலமாக அறியப்பட்டவர், 1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரெயில் நிலையத்தில் அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் என்ற ஆங்கிலேயரை சுட்டுப் படுகொலை செய்தார். பின்னர் தான் கைது செய்வதைத் தவிர்க்க வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவமானது இந்திய சுதந்திர இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆஷ் இந்திய சுதந்திர இயக்கத்தை நசுக்கியதாகவும், இந்தியர்களுக்கெதிராக வன்முறையைப் பயன்படுத்த […]
தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர அதிமுக தெற்குப் பகுதி செயலாளராகவும் இருந்து வருபவர் எஸ்.பி.எஸ்.ராஜா. அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார். இந்நிலையில் சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரி பொன்னரசி என்பவரிடம் ரூ.17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப […]
ஞாயிறு பிரதோஷம்… ராகுகால பிரதோஷ தரிசனம்! சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி என்று சிவன் கோயிலுக்குச் சென்று நந்தியம் பெருமானையும் சிவபெருமானையும் வணங்கி வழிபடுங்கள். இது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும். ஞாயிற்றுக்கிழமையில், ராகுகால வேளையில், பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்யுங்கள். சகல தோஷங்களும் விலகும். வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும் என்பது உறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மறக்காமல் சிவ தரிசனம் […]
தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்; தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.100 கோடிக்கு மேல்
தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கபப்ட்டு இருந்தது. தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி கடலுக்கு செல்லவேண்டும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செல்லவில்லை. நேற்று கடலுக்கு சென்றனர். தூத்துக்குடி […]







