கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் நேற்று மாலை புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர் கோவில்பட்டி முத்து நகரில் உள்ள மஹா கணபதி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது மாலை 6 மணிக்கு […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் T. சண்முகபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை நிறுவப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையை.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,.கீதாஜீவன் திறந்து வைத்தார்..நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன் தலைமை தாங்கினார்,. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ஜவஹர் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரிசுப்புராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள் […]
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றான் கிராமத்தில் ரூ. 48.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் ஒன்றியக் குழு தலைவர். ரமேஷ், துணைத் தலைவரும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான காசி விஸ்வநாதன், எப்போதும்வென்றான் ஊராட்சி தலைவர் முத்துக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,.
நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்… வாழைக்காய்.. வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை. வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும். வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு […]
கோவில்பட்டி ரெயில்நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் தமிழ் தெரியாத ஊழியர்கள்; அடிக்கடி நடக்கும் குளறுபடிகள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியாமான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து ஒவ்வொரு ரெயிலுக்கும் குறைந்த பட்சம் 200 பேர் வரை டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். மதுரை கோட்டத்தில் அதிக வருமானத்தை பெற்று தரும் ரெயில் நிலையமாக கோவில்பட்டி ரெயில்நிலையம் விளங்குகிறது. ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் இந்தி பேசும் வடமாநில ஊழியர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அவர்களுக்கு தமிழ் தெரியாது. இதனால்ஏற்படும் குளறுபடி காரணமாக பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.. […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.,தலைமையில் அமைக்கபட்டுள்ள குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தனர். மதுரை பாண்டி கோயில் அருகே துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் […]
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாபாக்கத்தில் பிரமாண்ட பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட பஸ்கள் அனைத்தும் இங்கிருந்துதான் புறப்படுகின்றன, பொதுமக்கள் வசதிக்காக எந்தெந்த ஊர் பஸ்கள் எந்த நடைமேடையில் நிற்கும் என்ற விவரம் இங்கு தரப்படுகிறது. நடைமேடை1: மார்த்தாண்டம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள். நடைமேடை 2:ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்த்தாண்டம், பாபநாசம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருவனந்தபுரம், திருநெல்வேலி, திருச்செந்தூர், திசையன்விளை, செங்கோட்டை, சிவகாசி, குலசேகரம், […]
கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில்இரவு நேர பஸ் சேவையை சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், “கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் பஸ்நிலையம் வரை இயங்கும் என்றார் ஆனால் தற்போது இந்த பஸ் சேவை திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து 15 நாட்களுக்கு மேலாக இன்று வரை […]
தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்காக நாளை (7.2.2024) நடைபெறுவதாக இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நிர்வாக காரணங்களுக்காக வரும் 9.2.2024 ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி […]







