கோவில்பட்டி கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் நேற்று மாலை புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டது.
அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனையும், நந்தியம் பெருமானையும் தரிசனம் செய்தனர்

கோவில்பட்டி முத்து நகரில் உள்ள மஹா கணபதி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சஸ் பூஜை நடைபெற்றது அதை தொடர்ந்து மஹா கணபதி மற்றும் சங்கரலிங்க சுவாமிக்கு 11 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது.
அம்மா பூமாதேவி கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியன் முத்துமாரியம்மன் கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் பூஜைகளை செய்தனர் நிர்வாக கமிட்டி தலைவர், உறுப்பினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது33mSee translation







