தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஹேமா மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு திட்டங்குளம் பகுதியில் பெண்களிடம் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுவரை 3854 “மாற்றத்தை […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்புபூஜை நடைபெற்றது . இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபபெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் […]
திருச்செந்தூர், ராமேசுவரம் கடற்கரையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் இந்துக்கள் தங்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி கரையோரம் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வார்கள். இன்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர், ராமேசுவரம் கடற்கரையில் ஏராளமானோர் அதிகாலையே குவிந்தனர். […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் போலீசார் நேற்று (7.2.2024) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தாளமுத்துநகர் சுடுகாடு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா மகன் […]
கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு தூத்துக்குடியில் இருந்து வேளாண்மை துணை இயக்குனர் மனோரஞ்சிதம் (வயது 41) ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தபோது தற்காலிக ஊழியர் தனபாலன் என்பவர் பலநாட்களாக வருகை பதிவேட்டில் கையெழுத்து போடாமல் இருந்ததை கண்டுபிடித்தார். இது பற்றி அந்த ஊழியரை அழைத்து விசாரித்தார்,. இதனால் ஆத்திரம் அடைந்த தனபாலன், பெண் அதிகாரி மனோரஞ்சிதத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் […]
தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளின் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் திறனாய்வு தேர்வு ஈரோடு சிறப்பு படை காவல்துறை தலைவர் டாக்டர் எஸ். முருகன் மேற்பார்வையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்களில் முதற்கட்டமாக 470 […]
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 1112 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 134 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கியதுடன் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்களையும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட திட்ட அலுவலர் வீரபத்திரன், […]
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டவர்மங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நூலகத்தை பார்வையிட்டார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. இதையொட்டி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.தேசிய கொடி ஏற்றப்பட்டு ஒலிம்பிக் தீபமும் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்பிரகாஷ் ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக […]
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை இன்று கொண்டாடின. கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கியின் முன்பு இன்று 8/2/2024 காலை பேருந்து, மினி பேருந்து,ஆட்டோ,இரு சக்கர வாகனங்கள் மற்றும்,சரக்கு வாகனங்களில் சென்றோருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்து,, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுவரம் […]







