அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.இதற்காக மதுரை வலையங்குளத்தில் கருப்புசாமி கோவில் அருகே பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் முகப்பானது கோட்டை போன்றும், அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி படமும் வைக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க […]
மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்ட வாகனங்களை சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கச்ச தீவை பொறுத்தவரையில் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம்.அன்றைக்கு கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.அன்றைக்கு கச்சதீவை தாரை வார்த்துக்கொண்டிருந்தபோது வயை மூடிக்கொண்டிருந்தார். ஏன் என்றால் சர்க்காரியா கமிஷன்.வாயை திறந்திருந்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.அதனால் கச்சதீவை […]
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் இன்று (19.8.2023) காலை திடீர் விசிட் மேற்கொண்டார். ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் ஆயுத கிடங்கை பார்வையிட்டு ஆயுதங்கள் மற்றும் காவலர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்றும் ஆயுதப்படை வளாகம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் பணியிலிருந்த ஆயுதப்படை காவலர்களின் நலன் கருதி, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு, ஏதாவது குறைகள் இருந்தால் தன்னை […]
கோவில்பட்டி நகர் , புறநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 19.8.23 சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மின்தடை அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப் பட்டுள்ளதாக செயற் பொறியாளர் எஸ். காளிமுத்து அறிவித்தார். மேலும் இன்றைய மின்தடை செவ்வாய்க்கிழமைக்கு (22-ந்தேதி) மாற்றம் […]
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் வருகிற (செப்டம்பர்) 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென் காசி மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சமுதாய […]
கோவில்பட்டி ஸ்டாலின் காலனியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் கோவிலுக்கான கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் முடிவெடுத்து பணிகளை தொடங்கினர். அந்த இடம் பள்ளிக்கு சொந்தமானது என புகார் வந்ததை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் அங்கு சென்று சென்று கட்டிடப்பணிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டாலின் காலனி மக்கள் சமுதாய தலைவர் சுடலை மணி, செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் கண்களில் கருப்புத்துணி […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பேர்சில் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அழகுலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவசகாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் தாசில்தார் லெனின், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி மற்றும் […]
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பிரசாரம் நடந்தது. மக்கள் நீதி மய்யத்தின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தலைவர் அபிராமி முருகன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், இந்திய கலாசார நட்புறவு கழக மாவட்ட துணைத்தலைவர் சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் […]
திருநெல்வேலி – பாலக்காடு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வண்டி எண் 16791 பாலக்காடு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 4.50க்கு திருநெல்வேலி வந்தடையும். காலை 7 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். வண்டி எண் 16792 தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25க்கு புறப்படும். இரவு 11.20க்கும் நெல்லை சென்றடையும். மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த […]
கொடைக்கானல் வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- வன உயிரின சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் கீழ்க்கண்டவாறு வசூல் செய்யப்படுகிறது. பெரியவர்கள்- ரூ.30 5-12 வயது வரையிலான குழந்தைகள்- ரூ.20 5-12 வயது வரையிலான தனியார் பள்ளி குழந்தைகள்- ரூ.20 5-12 வயது வரையிலான அரசு மற்றும் உதவி பெரும் பள்ளி குழநதைகள்- ரூ..5 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்- கட்டணம் இல்லை. கை கேமரா/ […]







