• May 17, 2024

கச்சதீவு விவகாரம்: தி.மு.க. மீது டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு  

 கச்சதீவு விவகாரம்: தி.மு.க. மீது டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு  

மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்ட வாகனங்களை சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜெயக்குமார்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கச்ச தீவை பொறுத்தவரையில் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம்.அன்றைக்கு கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.அன்றைக்கு கச்சதீவை தாரை வார்த்துக்கொண்டிருந்தபோது வயை மூடிக்கொண்டிருந்தார். ஏன் என்றால் சர்க்காரியா கமிஷன்.வாயை திறந்திருந்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.அதனால் கச்சதீவை எடுத்துகொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார்.

இன்றைக்கு அவரின் புதல்வர் ஸ்டாலின் கச்சதீவை மீட்பேன் என்று சொல்கிறார்.கச்சதீவு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது. இது குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன முகாந்திரம் உள்ளது. 1974 ல் கச்ச தீவை தாரை வார்த்து அளித்தது உங்கள் அப்பாதான்.இதனை நாங்கள் சொல்லவில்லை.அன்றைக்கு பாராளுமன்றத்தில் சுரன்சிங் சொல்கிறார்.கச்சதீவை நாங்கள் அளிக்கும்போது  அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடன் இரண்டு முறை கலந்தாலோசித்தோம்  என்று தெரிவித்துள்ளார்.

அப்படி என்றால் இவரின் இசைவு  இல்லாமல் ஒப்பந்தம் போட முடியுமா.இந்த உண்மையை பாராளுமன்றத்திலேயே குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு ஆகஸ்ட் 28 ம் தேதி  சட்டமன்றம் கூடும்போது ஒரு தீர்மானம் கொண்டுவருகிறார்கள்.அந்த தீர்மானத்தில் இந்த விவகாரத்தினால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற ஏதாவது ஒரு வரி இருந்ததா?.மீனவர்கள் குறித்து அதில் ஒரு வரியும் இல்லை. அந்த தீர்மானத்தில் சட்டமன்றம் வருத்தப்படுகிறது என்றுதான் இருந்தது.ஒரு கண்டனம் கூட மத்திய அரசை எதிர்த்து அந்த தீர்மானத்தில் நிறைவேற்றவில்லை.

அன்றைக்கு ஆலடி அருணா சட்டமன்றத்தில் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.இதனை எல்லாம் மீறி கச்ச தீவை கொடுத்துவிட்டு இன்றைக்கு வாய் கிழய கச்சதீவை மீட்பேன் என்றால் ,தேர்தல் வரும்போது இதுபோன்ற பசப்பு வார்த்தைகள்,ஆசை வார்த்தைகள்,மக்களை மோசடி செய்யவேண்டும் என்ற வகையிலே குறிப்பாக மீனவ மக்கள் இந்த இரண்டுவருட காலத்திலே சொல்ல முடியாத அளவுக்கு துயரத்தில் உள்ளார்கள்.

அம்மாவின் தலைமையில் நாங்கள் அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்தபோது நான் ஒத்திவைப்பு தீர்மானத்தை அளிக்கிறேன்.கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தெரியாது.எல்லை தாண்டி போவது வழக்கம்.அப்படி தெரியாமல் போகும் மீனவர்களை மீட்க ஒரு நிர்பந்தத்தை மத்திய அரசுக்கு எங்கள் ஆட்சி காலத்தில் அளித்து  அதன் அடிப்படையில் மத்திய அரசு அவர்களை கொண்டுவந்தது. 19 படகுகளுக்கு ரூ.19 லட்சம் அளித்தோம்.ஆனால் இதே பிரச்சனை குறித்து நான் ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்தபோது  அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி  மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று சொன்னார்.

பேராசையின் காரணமாக அவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம். தி.மு.க. தமிழக மீனர்களுக்காக பேச மாட்டார்கள். இலங்கைக்காக பேசக்கூடிய ஒரு கட்சி. இலங்கைக்காக,சிங்களர்களுக்காக பேசக்கூடிய ஒரு கட்சி தி.மு.க,. கச்சத்தீவை பொறுத்தவரையில் எங்கள் நிலைப்பாடு மீட்கப்படவேண்டும். அதனால்தான் அம்மா அவர்கள் 1991 ல் சுதந்திர தின கொடி ஏற்றும்போது  தி.மு.க.வால் தாரை வார்க்கபபட்ட  கச்சதீவை மீட்பதுதான் என்னுடைய தலையாய கடமை என்று சொல்லி  அன்று சூளுரை ஏற்றார்.

சூளுரை ஏற்றது மட்டுமல்லாமல்  சட்டமன்றத்திலும் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். அம்மா காலத்திலும் சரி,எடப்பாடியார் காலத்திலும் சரி கச்சதீவை மீட்க பிரமதரை சந்திக்கும்போதெல்லாம் அழுத்தம்  அளித்துள்ளோம்.

கச்சதீவு தாரை வார்க்கப்பட்ட பின்னர் ஆட்சியில் இருக்கும்போது தீர்மானம் போடவில்லை. சரி இந்த இரண்டு வருடத்திலாவது சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டார்களா.இப்போது மட்டும் ஏன் சொல்கிறீர்கள்.நீங்கள் கலந்துகொண்டது மீனவர் மாநாடு கிடையாது. மீனவர் போர்வையில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம் அது. ஏன் என்றால் எந்த திட்டமும் மீனவர்களுக்கு கொண்டுவரவில்லை என்று மீனவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். அறிவிக்கப்பட்ட சில திட்டங்களைக்கூட செயல்படுத்தவில்லை என்று புறக்கணித்துவிட்டனர்.

எங்கள் ஆட்சியில் எத்தனை துறைமுகங்களை அமைத்தோம்- இப்போது முதலமைச்சர் பேசிய இடத்தில் துறைமுகத்தை அமைத்தது நாங்கள்தான். கன்னியாகுமரியில் கடல் அரிப்பை தடுக்கும் அனைத்து நடவடிக்கையும் எடுத்தோம். பல ஆயிரக்கணாக்கான பணத்தை நாஙகள் செலவு செய்த சூழ்நிலையிலே,இப்போது ஒரு ரூபாய் கூட செலவு செய்யலாமல் இன்றைக்கு மாநாடு நடத்துகிறோம் என்ற போர்வையிலே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்துள்ளது.

காவிரி விவகாரம்.,கச்சதீவு விவகாரம் சட்டமன்றத்தில் வந்தாலே தி.மு.க.வினர் ஓடிவிடுவார்கள் என்று அம்மா சொல்வார்.கச்சதீவு பிரச்சனை என்றால் நடிகர் செந்தில் நடித்த படம்தான் நினைவு வருகிறது.அதுபோல தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் ஸ்டாலின் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.இது மக்களிடத்தில் எடுபடாது.இது ஏமாற்றும் செயல் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

நாங்கள் அப்போது 5 திட்ட அம்சங்களை வைத்து மத்திய அரசுக்கு ஆதரவு அளித்தோம்.காவிரி நீர் தரவில்லை என்பதற்காக ஆதரவை வாபஸ் பெற்றோம்.நீங்கள் 17 வருடம் மத்திய அரசுடன் அங்கம் வகித்தீர்களே.17 வருடம் உத்தரவு போடும் இடத்தில் இருக்கும்போது ஏன் எதையும் செய்யவில்லை.கல்வியை பொது பட்டியலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவந்திருக்கலாமே.நீட் வந்திருக்காதே.இதுபோல பல விஷயங்களை செய்திருக்கலாமே.உத்தரவு போடும் நிலையில் இருந்தும் எதையும் செய்யவில்லை.

பதவியில் இருக்கும்போது கச்சதீவு குறித்து கவனம் வரவில்லை.காவிரி குறித்து கவனம் வரவில்லை.இலங்கை பிரச்சனை குறித்து கவனம் வரவில்லை.அப்போது பதவி,பணம் இவற்றில் மட்டும்தான் குறியாக இருந்தார்கள்.மக்களை ஏமாற்றும் செயலை தொடர்ந்து செய்துவருகிறார்கள்.வரும் தேர்தலில் இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.மதுரை மாநாடு இந்தியா முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *