கோவில்பட்டியில் கபடி பயிற்சி முகாம்; 100 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கோடை கால கபடி பயிற்சி முகாம் கடந்த 1 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் 50 வீராங்கனைகள் , 50 வீரர்கள் என தமிழகம் முழுவதும் 100 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் நிறைவு விழா முத்து நகர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஸ்டேட் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் தங்கவேல், திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சுப்பிரமணியன், பரமசிவன், ஆறுமுகச்சாமி, மற்றும் முனைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக பாரதி நகர் நண்பர்கள் கபடி குழு பெருமாள், டாஸ்மாக் ராஜா , உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வக்குமார், ராஜா, முனைவர் முனீஸ்வரன் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் கல்வி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு
வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கினார்கள்
பயிற்சி முகாமை இயக்குனர் செந்தூர்கனி, முதன்மை பயிற்சியாளர் முனைவர் கரிகாலன், உடற்கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் பயிற்சியாளர்கள் சதீஷ், ஜேசா மற்றும் கவின் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.








1 Comment
State yoga