கோவில்பட்டி அருகே கழுகுமலை அம்பேத்கர் நகர் மாடசாமி மகன் ராஜேஷ் (வயது 24). பெயின்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கோவில்பட்டியிலிருந்து இவர், நண்பர் கலையரசன் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாலாட்டின்புத்தூரில் இருந்து போர்வெல் தொழிலாளியான ஜார்கண்ட்டை சேர்ந்த மரங்சபர் மகன் சுகுசபர் (19) என்பவர் மோட்டார் சைக்கிளில் தன்னுடன் வேலை பார்க்கும் திருச்சி அய்யாகுளத்துப் பட்டியை சேர்ந்த ரெங்கசாமி மகன் […]
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் வடக்கு மாவட்டக்கூட்டம் திட்டங்குளம் .தினசரி காய்கறிச் சந்தையில் நடைபெற்றது.வடக்கு மாவட்டத்தலைவர் நாஞ்சில் குமார் தலைமை தாங்கினார், திட்டங்குளம் தினசரிச்சந்தை தலைவர் அழகுராஜா என்றபன்னீர்செல்வம், பொருளாளர் சின்ன மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் மாநிலத்தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். மாநிலப்பொருளாளர் அரிகிருஷ்ணன், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் க.தமிழரசன், நிர்வாகி முனைவர். ஆ.சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்கூட்டத்தில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து […]
அரசியல் விமர்சகர் சவுக்குசங்கர் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது,. தொடர்ந்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் ஒரு அறிக்கையும் வெளியானது. அந்த அறிக்கையில் அ.தி.மு.க. தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினராக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் அவர்களை தலைமை கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பின் ஏக மனதுடன் நியமனம் செய்கிறேன் என்று கூறி இருந்தார்.இது தவறான செய்தியாகும். வேண்டுமென்றே எடப்பாடி பழனிசாமி பெயரில் […]
கோவில்பட்டி பாரதி நகர் 7-வது தெருவில் குடியிருப்பவர் பாலசுப்பிரமணியன் மனைவி ஜோதி (வயது 64). இவர்களுடைய மகள் பகவதி திருமணமாகி கணவருடன் ஜோதி நகரில் குடியிருந்து வருகிறார். பாலசுப்பிரமணியன் இறந்து விட்டார். இதனால் வீட்டில் தனியாக இருக்கும் ஜோதி, இரவு நேரத்தில் ஜோதி நகரில் உள்ள மகள் பகவதி வீட்டிற்கு சென்று தங்கி விட்டு, காலையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு ஜோதி நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி விட்டு, நேற்று […]
கோவில்பட்டி தொழிலதிபர் ஏ.பிரபாகரன்- லைலா பிரபாகரன் தம்பதியினர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள சிதம்பராபுரத்தில் 2 ஏக்கர் 18 சென்ட் இடத்தை நாடார் மகாஜன சங்கத்திற்கு தானமாக வழங்கினார்கள். இந்த இடத்தில் நாடார் மகாஜன சங்கம் வி.என்.பி.ஆர். அய்யாச்சாமி நாடார்- ராஜரத்தினம்மாள் அகாடமி என்ற பெயரில் மத்திய- மாநில அரசுகளின் வேலைவாய்ப்புக்காக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மையம் நடத்த முடிவெடுத்து கட்டிடம் கட்டியது. இந்த மையத்தில் அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறும் வகையில் மத்திய- மாநில அரசு, […]
அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலையில் மாநாடு அரங்கில் கட்சி கொடியேற்றி எடப்பாடி பழனிசாமி, மாநாட்டை தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்தன. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, தனபால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் ஒரு கிணற்றில் கடந்த 10 ம் தேதி சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஒரு இளம் பெண் உடல் மிதந்தது இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் வினோதினி !வயது 19) என்பது தெரிய வந்தது. திருமணமாகி 4 மாதங்களே […]
கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட மூப்பன்பட்டி கிராமத்தில் இன்று (20.8.2023) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் பெ.கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார்.பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகள் குறித்து கனிமொழி, கீதாஜீவன் ஆகியோர் கேட்டறிந்தார்கள்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தபெ.ஜெகன் , சார் ஆட்சியர் (தூத்துக்குடி)/ கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் […]
நீட் தேர்வை எதிர்த்தும் ஆளுநரை கண்டித்தும் தி. மு. க.இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக தூத்துக்குடியில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் உண்ணாவிரத முடிவில் மாலை 5 மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி., பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் […]
நரம்பியல் நோயினால் இரண்டு கால்களும் செயல் இழந்த டாக்டர் ஒருவர், மற்றவர்கள் யாரும் தன்னை போல் பாதிக்ககூடாது என்பதற்காக 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது பெயர் ஆறுமுகம். கன்னியாகுமரி அருகே தலைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தபிறகு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பு படித்து மூளை நரம்பியல் நிபுணர் ஆனார். இவர் குடும்பத்தில் […]







