தூத்துக்குடி மாவட்டத்தில், வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா (11.7.23) அன்று கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள உருவசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வந்தனர். இருசக்கர வாகன பேரணி செல்வதற்கு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பெண்கள் மற்றும் பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமலும் விதிமுறைகளை மீறி […]
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு, பாண்டவர்மங்கலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கரும்பன், மாவட்ட பஞ்சாலை தொழிற் சங்க தலைவர் பரமராஜ், நகர செயலாளர் சரோஜா, தாலுகா உதவி செயலாளர் சுரேஷ், நகர உதவி செயலாளர்கள் முனியசாமி, அலாவுதீன் மற்றும் பாண்டவர்மங்கலம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ராஜேஷ் […]
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த சூசைபாண்டியா புரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ)பணியாற்றி வந்தார். இவர் பணியிலிருந்த போது கடந்த 25.4.2023 அன்று மணல் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து , அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், ஏ.லூர்து […]
தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டி கோவில்பட்டி யில் த. மா . கா. வினர், நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. பி. ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தார். திருமுருகன் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். ஏ. கனி, நகர பொருளாளர் சண்முகராஜ்,துணைத் தலைவர் ராஜமாணிக்கம் சுப்புராஜ் நகரச் செயலாளர்கள் வின்சென்ட் மணிமாறன் சரவணன் துணை செயலாளர் ஜான் மாரிமுத்து, வட்டார துணைத் தலைவர் […]
அ.தி.மு.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன்,சசிகலாவுக்கு மன்னிப்பு கடிதம் பொருந்தாது; டி ஜெயக்குமார்
சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அவர் கூறுகையில். “கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஒரு வரலாற்றை உருவாக்கும் வகையில் ,இது வரை தமிழகமே கண்டிராத வகையில் ஒரு எழுச்சியாக மாநாடு நடைபெறுகின்ற நிலையில் நமது அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில்,கழகத்தை எந்த கொம்பானாலும் அசைக்க முடியா ஒரு இரும்பு கோட்டை என்ற வகையில் இந்த மாநாட்டிற்கு அலை அலையாய்,குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்ற வகையில் இன்றைக்கு ஆலோசனை […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் பொருளாதார வளர்ச்சி இன்றியமையாததாகும். இதனை நன்கு உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் மக்களுக்கு சுயதொழில் தொடங்க கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ், இவ்வகுப்பைச் சார்ந்த ஏழை, எளிய மக்களுக்கு பித்தளை சலவைப் பெட்டிகள் மற்றும் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்ட தையல் […]
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவியே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். சித்தர்களும், முனிவர்களும் இந்த நாளில்தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் […]
கரூர் மாவட்டம் பாளையம் அருகே உள்ளது தேவர்மலை. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரின் கோபம் தணிந்த இடம் இது. இங்கே, `ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள்’ என்ற பெயரில் காட்சிதருகிறார் பெருமாள். ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் பெரிய கதவுகளுடன், கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயிலைக் கடந்து சென்றால், இருபுறமும் பெரிய திண்ணை அமைந்திருக்கிறது. கோயிலில் மொத்தம் மூன்று ஸ்தூபிகள். ஒன்று வெளிப்புறத்திலும், மற்ற இரண்டும் உள்ளேயும் இருக்கின்றன. நுழைவாயிலுக்கு வலப்புறத்தில் ஒரு மண்டபம் இருக்கிறது. செம்புத் தகட்டால் வேயப்பட்ட […]
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான பணிக்குழு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்; நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட விபரங்கள் மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது. * 21 வயது நிரம்பிய குடும்பத்தலைவிகளிடம் கலைஞர் மகளிர் […]
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாத செலுத்தினார்கள். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் வேன், கார்கள் மற்றும் இரு சக்கர வாகங்களில் கட்டாலங்குலம் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர், மதுரையில் இருந்து வாகனங்களில் வந்த ஒரு குழுவினர் மணி மண்டபம் செல்லும் வழியிலுள்ள […]







