திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சிக்காக விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வருவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில், ஹெலிகாப்டர் பயணம் தவிர்க்கப்பட்டு, சுமார் 60 கி.மீ தொலைவுக்கு சாலை மார்க்கமாக காரில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே, நாளை காலை முதல் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மதுரை – […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை பகுதியில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று பகலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர்,தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்,இந்த விபத்தில் 3 வெடி மருந்து கிடங்குகளில் இருந்த பணியாளர்கள் 5 பேர் தீயில் கருகி பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா உள்பட 5 பேர் பலியானதாகவும் 10 […]
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த நிலையில் இந்த புகார் குறித்த உண்மை […]
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதை யோட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018, 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் 300 நபர்கள் அமர கூடிய வளாகத்திற்கான ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டமளிப்பு விழாவுக்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார்.பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான […]
எதிர்க்கட்சியாக செயல்படுவதில் அ.தி.மு.க. எதற்காக மந்தநிலையில் இருக்கிறது என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டி,ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கையின் அடிப்படையிலும் தமிழகத்தில் எதிர்கட்சி அ.தி.மு.க. தான். இதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.செயல்படவில்லை என்றும் நாங்கள் பலவீனமாக இருப்பதாகவும் ஒரு பிம்பத்தை சிலர் உருவாக்குகிறார்கள்.அதற்கு தி.மு.க.வும் உடந்தை. தேர்தல் வந்தால் இவையெல்லாம் அடிபட்டுப்போகும். அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி எப்போதும் மாறாது, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க.வுக்கும் […]
கோவில்பட்டியில், கி.ராஜநாராயணன் நினைவு மணிமண்டபம்: இறுதிக்கட்ட பணியை பொதுப்பணித்துறை செயலாளர் பார்வையிட்டார்
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இந்த மணிமண்டபம் உருவாகி வருகிறது.கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது, ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில் அரசு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் இன்று கோவில்பட்டி வந்தார். அவர் […]
சிவபெருமான் அந்தகாசுரன் என்னும் அரக்கனுடன் போர் புரியும்போது, அரக்கனின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தில் இருந்த ஏராளமான அரக்கர்கள் தோன்றினர். அவர்களை அழிக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்னும் சக்தியை வாயிலிருந்து வெளிப்படுத்தினார். யோகேஸ்வரி மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினாள். இவளுக்கு உதவியாக பிரம்மா பிராம்மியையும், முருகன் கவுமாரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், வாரக மூர்த்தி வாராஹியையும், இந்திரன் இந்திராணியையும், யமன் சாமுண்டியையும் உருவாக்கினர். இவர்களே சப்தகன்னியர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது. சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது அவளுக்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (9.11.2022) வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 104416 ஆண் வாக்காளர்களும், 108932 பெண் […]
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. அதன்படி, 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் கடும் விமர்சனம் […]







