கோவில்பட்டியில், கி.ராஜநாராயணன் நினைவு மணிமண்டபம்: இறுதிக்கட்ட பணியை பொதுப்பணித்துறை செயலாளர் பார்வையிட்டார்
![கோவில்பட்டியில், கி.ராஜநாராயணன் நினைவு மணிமண்டபம்: இறுதிக்கட்ட பணியை பொதுப்பணித்துறை செயலாளர் பார்வையிட்டார்](https://tn96news.com/wp-content/uploads/2022/11/eff25223-e446-48f7-9ddc-cb77d345e3e4.jpg)
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் இந்த மணிமண்டபம் உருவாகி வருகிறது.
கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலியாக இருந்த இடத்தில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது, ரூ.1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில்
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த மணிமண்டபம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் அரசு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கே.மணிவாசன் இன்று கோவில்பட்டி வந்தார். அவர் ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)