சப்தகன்னியர்களின் வரலாறு
![சப்தகன்னியர்களின் வரலாறு](https://tn96news.com/wp-content/uploads/2022/11/79fbe0ce-0331-4078-ac0a-ea052f17eb9a-850x543.jpg)
சிவபெருமான் அந்தகாசுரன் என்னும் அரக்கனுடன் போர் புரியும்போது, அரக்கனின் உடலில் இருந்து வெளியேறிய ரத்தத்தில் இருந்த ஏராளமான அரக்கர்கள் தோன்றினர்.
அவர்களை அழிக்க சிவபெருமான் யோகேஸ்வரி என்னும் சக்தியை வாயிலிருந்து வெளிப்படுத்தினார்.
யோகேஸ்வரி மகேஸ்வரி என்ற சக்தியை உருவாக்கினாள்.
இவளுக்கு உதவியாக பிரம்மா பிராம்மியையும், முருகன் கவுமாரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், வாரக மூர்த்தி வாராஹியையும், இந்திரன் இந்திராணியையும், யமன் சாமுண்டியையும் உருவாக்கினர். இவர்களே சப்தகன்னியர்கள் ஆவர் என்றும் கூறப்படுகிறது.
சும்ப நிசும்பர்களை அழிக்க அம்பிகை போர்புரிந்தபோது அவளுக்கு உதவியாக சப்தகன்னியர்கள் தோன்றினர் என்றும்
கூறப்படுகிறது.
மகிஷாசுரன் என்ற அரக்கன் கருவில் உருவாகாத பெண் சக்தியால் மட்டுமே அழிவு வேண்டும் என்ற வரத்தினைப் பெற்று ஆணவத்தால் உலக உயிர்களை துன்புறுத்தினான்.
அதனால் அம்பிகை தனது சக்தியாக கருவில் உருலாகாத சப்தகன்னியர்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் அரக்கனை வதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கிராமங்களில் பழங்காலத்தில் நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற பெண்கள் சுழலில் சிக்கியும், தாமரைக் கொடியில் சிக்கியும், நீர்நிலைகளில் தவறி விழுந்தும் இறந்து விடுவர். இவர்களின் நினைவாக ஏழுபெண்களை உருவமாக வைத்து வழிபடப் பெற்றவர்களே சப்தகன்னியர் என்றும் கூறப்படுகிறது
—காசி விஸ்வநாதன், திருநெல்வேலி—
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)