தூத்துக்குடி: 6 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (9.11.2022) வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 104416 ஆண் வாக்காளர்களும், 108932 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 213364 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 136456 ஆண் வாக்காளர்களும், 142435 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 278961 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 116446 ஆண் வாக்காளர்களும், 123500 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 239975 வாக்காளர்கள் உள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 110032 ஆண் வாக்காளர்களும், 113544 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 223580 வாக்காளர்கள் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 119562 ஆண் வாக்காளர்களும், 124966 பெண் வாக்காளர்களும், 48 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 244576 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 124776 ஆண் வாக்காளர்களும், 130708 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 255513 வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 711688 ஆண் வாக்காளர்களும், 744085 பெண் வாக்காளர்களும், 196 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 1455969 வாக்காளர் உள்ளனர்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
