கோவில்பட்டி நகரில் உள்ள சாலைகளின் இருபுறமும் கடைகளில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு ஒருபுறம்… மறுபுறம் மழைக்கு அரித்து கொண்டுவரப்படும் மணல் திட்டுகள் அகற்றப்படாமல் விபத்துக்கு வழிவகுக்கும்.நெடுஞ்சாலை பணியாளர்கள் இதையெல்லாம் தினமும் சரி செய்தால் சாலை அழகுறும். இரு சக்கர வாகன ஓட்டிகள் பயமின்றி சாலைகளில் பயணம் செய்யமுடியும்.அது போல் செய்யாத காரணத்தினால் நகரில் பல இடங்களில் சாலைகளில் மணல் திட்டுகள் உருவாகி பெரும் பகுதியை ஆக்கிரமித்து உள்ளன. ரெயில் நிலையம் எதிர்புற சாலை, ஆர்.சி.சர்ச் அருகே, மெயின்ரோடு முழுவதும் […]
கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகலில் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார்.விமான நிலையத்தில் ,மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகைகுளம் விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மனோ தங்கராஜ், சாத்தூர் ராமச்சந்திரன், கண்ணப்பன், டி.ஆர்.பாலு எம்.பி., மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மற்றும் அதிகாரிகள் ஸ்டாலினை வரவேற்றனர்.விமான நிலைய வாசலில் கட்சி தொண்டர்கள் குவிந்து இருந்தநற். அவர்கள் வ்ரவேற்பை பெற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு போலீஸ் அணிவகுப்பு […]
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, 8.9.2022 – வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தருகிறார்.தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் […]
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-பாரம்பரிய நெல் ரகம் தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.ஆத்தூர் […]
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே ஞானியர் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகபாண்டி (வயது 63). இவரது மகள் அமுதா (35). இவருக்கு திருமணமாகவில்லை.இந்நிலையில் ஆறுமுகபாண்டி, மகள் அமுதாவின் 5 பவுன் நகையை அடகு வைத்து அந்த பணத்தில் சாத்தான்குளம் அருகே சுப்பராயபுரம் கிராமத்தில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தந்தையும் மகளும் அங்கேயே தங்கி தோட்ட வேலை பார்த்து வந்தனர்.கடந்த 3ம் தேதிய, அடகு வைத்த நகையை திருப்ப வேண்டும் என்று அமுதா […]
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்; சி.ஐ.டி.யு. மாநாட்டில் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. 11-வது மாவட்ட மாநாடு கோவில்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல் கொடி யேற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாநில செயலாளர் தங்க மோகனன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் ரசல் வேலை, அறிக்கையையும், பொருளாளர் அப்பாதுரை வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநாட்டில், தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும். தீப்பெட்டி ஆலை பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து […]
பள்ளிக்கூட பஸ்சின் அவசரவழிக்கதவு திறந்ததால் கீழே விழுந்த மாணவி படுகாயம்; தாசில்தார் நேரில்
கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரது மகள் ரதிமா(வயது 10) என்பவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இன்று காலையில் அந்த பள்ளியின் வாகனத்தில் ஊரிலிருந்து பள்ளிக்கு வந்தார். கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் பகுதியில் வாகனம் ஒரு வளைவில் திரும்பும் போது வாகனத்தின் அவசர வழிக்கதவு திடீரென திறந்து கொண்டது.இதனால் அந்த இடத்தில் அமர்ந்திருந்த மாணவி ரதிமா வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.மாணவர்களின் கூச்சலை தொடர்ந்து டிரைவர் […]
பிரபல நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம் .அவர்களுடன் செல்பி எடுக்க எல்லோரும் அலைமோதுவார்கள். ஆனால் செல்பி எடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.இது போல் ஒரு பொது நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கீர்த்தி செனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.நடிகை கீர்த்தி செனோனை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் அதிகம் கூடி இருந்த நிலையில் ஒரு குள்ளமான நபர் […]
திருச்செந்தூர் கோவிலில் சீமான் மகனுக்கு மொட்டை; கட்சி நிர்வாகி மடியில் உட்காரவைத்து போடப்பட்டது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி மூலவர், சண்முகர், பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தார்.பின்னர் தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.மொட்டை போடும்போது கட்சி நிர்வாகி முகமது என்பவர் மடியில் மகனை சீமான் உட்கார வைத்திருந்தார்.சுவாமி தரிசனத்துக்கு பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்காக […]
கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( வயது 30) இவருக்கும் ஷில்பா(வயது 27) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர்.திருமணத்துக்கு முன்பு ஷில்பா ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகிறது.\இந்த விவகாரம் கணவர் மகேசுக்கு தெரிந்தது. இதுகுறித்து மனைவி ஷில்பாவிடம் கேட்டபோது அவர் எனது நண்பர் […]







