நடிகையுடன் செல்பி எடுக்க வந்த குள்ள நபர் செய்த வேலையை பாருங்க…வைரல் வீடியோ
பிரபல நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடுவது வழக்கம் .அவர்களுடன் செல்பி எடுக்க எல்லோரும் அலைமோதுவார்கள். ஆனால் செல்பி எடுக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
இது போல் ஒரு பொது நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கீர்த்தி செனோன் உடன் செல்பி எடுக்க வந்த குள்ளமான நபர் செய்த காரியம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை கீர்த்தி செனோனை போட்டோ எடுக்க போட்டோகிராபர்கள் அதிகம் கூடி இருந்த நிலையில் ஒரு குள்ளமான நபர் நடுவில் புகுந்து செல்பி எடுக்க வந்தார். நடிகை அந்த நபரை அருகில் வரவழைத்து அவருக்காக கீழே அமர்ந்து அவரது போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.
தொடர்ந்து அந்த நபர் அடுத்து தன்னிடம் இருந்த கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டு சிரித்தபடி இன்னொரு செல்பி எடுங்க… என நடிகையை பார்த்து சொன்னதும் அவர் ஷாக் ஆகி விட்டார். பின்னர் போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://www.instagram.com/reel/CiBpcM_qIUB/?utm_source=ig_web_copy_link







