• February 7, 2025

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண் கைது

 காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற இளம்பெண் கைது

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்தவர் மகேஷ்( வயது 30) இவருக்கும் ஷில்பா(வயது 27) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. பின்னர் மகேஷ் -ஷில்பா தம்பதி கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர்.
திருமணத்துக்கு முன்பு ஷில்பா ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு கணவருக்கு தெரியாமல் காதலனுடன் உல்லாசமாக ஊர் சுற்றியதாக தெரிகிறது.
\இந்த விவகாரம் கணவர் மகேசுக்கு தெரிந்தது. இதுகுறித்து மனைவி ஷில்பாவிடம் கேட்டபோது அவர் எனது நண்பர் என்று கூறி சமாளித்து விட்டார்.
ஆனாலும், இது தொடர்பாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இந்த நிலையில்,ஷில்பா கடந்த 2-ஆம் தேதி காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார.
பின்னர், வலிப்பு நோயால் கணவர் உயிரிழந்துவிட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் , கார் மூலம் மகேஷ் உடலை மண்டியாவுக்கு எடுத்துச் சென்றார். பெற்றோர் வந்து பார்த்த போது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மண்டியா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், மகேஷின் பிரேதபரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீசார் ஷில்பாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது “திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகேஷை திருமணம் செய்து வைத்ததாகவும், அவருடன் வாழ விரும்பாததால் காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்”
வாக்குமூலத்தின் அடிப்படையில் ஷில்பாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காதலனையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *