கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் இன்று மாலை சனி பிரதோஷம் சிறப்பு பூஜை நடைபெற்றது.நந்தியம்பெருமனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரரும்,மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திரராயின் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. டாக்டர்கள் பலர் ரத்ததானம் வழங்கி டாக்டர் பிதான்சந்தரராய் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் மனிதகுல சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும்,மனச்சாட்சியுடனும், கண்ணியத்துடனும், தொழிலை மேற்கொள்ளவும்,மருத்துவ தொழிலின் […]
கோவில்பட்டி-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் பரமசிவம், துணை தலைவர் கோபால்சாமி, சாத்தூர்-தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் த தலைவர் லட்சுமணன், துணை தலைவர் பெருமாள்சாமி, அகில இந்திய தீப்பெட்டி தொழில் கூட்டமைப்பின் தலைவர் நூர்முகமது, குடியாத்தம்- தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் […]
கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டியில் செயல்பட்டு வந்த அப்பனேரியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊராணி தெருவை சேர்ந்த மாரியம்மாள் (வயது 70) என்ற பெண் உயிரிழந்தார். கனகராஜேஸ்வரி என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் பலியான மாரியம்மாள் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வழங்கினால் மட்டும் தான் உடலை வாங்குவோம் […]
கோவில்பட்டி கடலைக்கார தெருவில் உள்ள நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு பூஜைகள் தொடங்கின. சங்கல்பம் பூஜை , விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடந்தது. பின்னர் 8 மணிக்கு மேல் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடந்தது, கும்பத்துக்கு […]
கோவில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி மெயின்ரோட்டில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்று மதியம் ஆலையின் பின்புறத்தில் உள்ள குச்சி அரவை இயந்திரம் அறைக்கு முன்புறம் தொழிலாளர்கள் சிலர் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்கள். அப்போது குச்சி இயந்திரத்தில் திடீர் என தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. இந்த தீயில் சிக்கி மாரியம்மாள் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கனகலட்சுமி […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. வருடாபிஷேக விழா 1-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் 8 மணிக்கு மேல் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட படுக்கப்பத்து உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 11-ந் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனி உதவி பொறியாளர் அலுவலகத்திலும் நடக்கிறது. 18-ந் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 25-ந் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட […]
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்ப் பேரரசு கட்சியினர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கழுதையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் அரசிடம் முறையான அனுமதி பெறாமல், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தனிநபர் ஒருவர் சந்தையினை அமைத்து நடத்தி வருகிறார். அந்த சந்தையை மூடுவதற்கு அரசு உயர் அதிகாரிகளும், நீதிமன்றமும் உத்தரவிட்டும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அதை நிறைவேற்றாத தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கட்சியினர் […]
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக் கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.பொறியியல் பட்டதாரியான இவர், ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஐப்பான் ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவர்.1989 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்த சிவதாஸ் மீனா, முதலில் காஞ்சிபுரம் உதவி கலெக்டராக பணியை தொடங்கினார். பின்னர், கோவில்பட்டி உதவித் கலெக்டராகவும், வேலூர் கூடுதல் கலெக்டராகவும், மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







