தூத்துக்குடி மாவட்டம் எப்போதுவென்றான் அருகே உள்ள ஏ.வேலாயுதபுரம் கிராமத்தைச் சார்ந்த முத்துச்சாமி மகன் சந்தனமாடசாமி(வயது 32) சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். தனது டிராக்டரில் தனது தாய் ராஜேஸ்வரி(60), அதே ஊரை சேர்ந்த மாடசாமி மனைவி கோமதி(50), செல்வபாண்டி மனைவி சரஸ்வதி(60) ஆகியோருடன் மஞ்சநாயக்கன்பட்டி ஏ.வேலாயுதபுரம் விலக்கு அருகில் விவசாய பணி செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த எட்டயாபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் முந்தி செல்ல முயன்றது. இதில் டிராக்டரின் பக்கவாட்டில் பள்ளி வேன் […]
கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் இலக்கியம், கலை மற்றும் இசை சங்க கூட்டம் நடைபெற்றது. இடமாறுதல் ஆகி செல்லும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமை தாங்கி பேசியதாவது:- இடமாறுதல் என்பது அரசு பணியில் இயல்பாக நடக்கக்கூடியதுதான். நான் எங்கு இடமாறுதல் பெற்று சென்றாலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்காகத்தான் ஒரு குழுவாக வேலை செய்ய போகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த 3 ஆண்டுகள் எனக்கு நிறைய அனுபவங்களை கற்றுத்தந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் , […]
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூா் செ. ராஜு எம்.எல்.ஏ. பங்கேற்று, அப்துல் கலாம் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ரத்த தான முகாமை தொடக்கிவைத்தாா். டாக்டர் வெங்கடேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த சேகரிப்பில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, ரத்த தானம் […]
கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். நகர தலைவர் மாடசாமி வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் சிலை அமைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். நலிவடைந்த முடி திருத்தும் தொழிலாளர்ளுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும். மருத்துவ தொழிலாளர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் அறக்கட்டளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச்சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகத்தின் செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். முனைவர்.ஆ.சம்பத்குமார் முன்னிலை வகித்தார், முகாமை கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு நிர்வாகி சுபேதார்.கருப்பசாமி தொடங்கி வைத்தார். கண் விழிப்பரிசோதகர் ஜோதிலட்சுமி முகாமில் கலந்து கொண்ட 50க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு கண் […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது . இதனையொட்டி சந்தன கருப்பசாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் தடியங்காய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் […]
கோவில்பட்டி சுபாநகர் திருமால் நகரில் ஸ்ரீ ஐஸ்வர்ய வீரலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனி வார பெருவிழா நடைபெற்று வருகிறது. இன்று 4-ம் சனிக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருப்பாவை சேவை, தீபாராதனை, சாற்று மறை கோஷ்டி நடைபெற்றது. பழ அலங்கார திவ்ய மண்டபத்தில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண அலங்காரம் நடந்தது. மாலை 6 ,மணிக்கு சிறப்பு பஜனை, நாம சங்கீர்த்தனம் நடைபெறும். நாளை 15-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை […]
கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையில் வீடுகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இதனால் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது;. அதே சமயம் வாகன போக்குவரத்து அதிகம் காரணமாக அடிக்கடி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. மந்தி தோப்பு சாலை தொடக்க பகுதி மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி எட்டயபுரம் ரோடு சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே மங்கள விநாயகர் கோவில் […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வேல் முருகனுக்கு தஞ்சை ஓவியங்கள் வரைவது பற்றி சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்கு சிறந்த கலை ஆசிரியருக்கான விருது மற்றும் ரூ10,000/-க்கான காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி,கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சிவ சவுந்தரவல்லி, உள்பட பலர் கலந்து […]
கோவில்பட்டி தாசில்தார் லெனின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி தாலுகா, ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுதப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகள் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றுக்கு ஒப்பதல் செய்யப்பட்ட லே அவுட்களில், ஏற்கனவே இலவச வீட்டுமனை ஒப்படை எனப்படும் `டி’ நமூனா பெற்றவர்களுக்கு , காலி மனை இ-பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தங்களிடம் உள்ள […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







